கூத்தாநல்லூரில் துவங்கிய தென்னிந்திய கால்பந்து போட்டி
கூத்தாநல்லூரில் துவங்கிய தென்னிந்திய கால்பந்து போட்டி / south indian states football tournament/ 24 teams participate/koothanallur திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் யங் பிளட் கால்பந்து கழகம் மற்றும் கூத்தாநல்லூர் கால்பந்து கழகம் சார்பில் தென்னிந்திய அளவிலான எழுவர் கால்பந்து போட்டி துவங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. 200க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். போட்டியை நாகை எம்பி செல்வராஜ் துவக்கி வைத்தார். முதல் போட்டியில் சென்னை போலீஸ் அணியும் கண்டனூர் அணியும் மோதியது. ஒரு மாதம் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ஒரு லட்சத்து 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ஒரு லட்சம், மூன்றாம் பரிசு ஐம்பதாயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்.