உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கடலில் கால் நனைத்து பார்வைக்குறை மாணவர்கள் குஷி | foot in the sea Visually impaired students

கடலில் கால் நனைத்து பார்வைக்குறை மாணவர்கள் குஷி | foot in the sea Visually impaired students

தஞ்சாவூரில் பார்வைக் குறையுள்ள மாணவர்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவ மாணவிகள் , கடலில் கால் நனைக்கும் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். இதனை தஞ்சை தனியார் அறக்கட்டளை நிறைவேற்றியது. இதற்காக 2 பஸ்களில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 120 பேர் வேளாங்கண்ணிக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மாணவர்கள் உற்சாகமாக கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . முதன் முதலாக மாணவர்கள் தங்கள் கால்களில் கடல் அலைகள் உரசிச்சென்றதை உணர்ந்தும், ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து, கடல் அலைகளை தொட்டுப்பார்த்து, மகிழ்ந்து கடலில் இறங்கி விளையாடினர்.

மார் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை