அய்யாக்கண்ணு, பாண்டியன் பங்கேற்பு| Tanjore Farmers Rail blockade
டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பிப் 17, 2024