தை துவங்கும் முன் நல்ல மழை Theni
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தேவதானப்பட்டி, வடுகபட்டி, எ.புதுப்பட்டி, லட்சுமிபுரம், கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தை பிறப்புக்கு முன்பே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் பாசன கண்மாய்களுக்கு நீர் வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜன 07, 2024