நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் | Megamalai Falls Ban on tourists
கன மழை எதிரொலியாக தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறை அறிவித்தது.
மே 19, 2024