அரசியல் ஆதாயத்திற்காக நாடகமாடுவதாக அதிகாரிகள், விவசாயிகள் குற்றச்சாட்டு | Demolish Periyar Dam
அரசியல் ஆதாயத்திற்காக நாடகமாடுவதாக அதிகாரிகள், விவசாயிகள் குற்றச்சாட்டு | Demolish Periyar Dam and build a new Dam? கேரளாவில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு, அதற்கு கீழே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீண்டும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கருத்துரு அனுப்பியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கூறுகையில், அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற பொய்களை கேரளா அவ்வப்போது சொல்கிறது. அணை கட்ட வாய்ப்பில்லை என்றனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன்பே புதிய அணை கட்ட திட்ட மிட்ட கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான சிறு பட்ஜெட்டும் ஒதுக்கியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26 ல் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் அணை பிரச்னையை கேரள அரசு எழுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் இதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிபுணர் குழுவிடம் மே 14 ல் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் 366 மீட்டர் நீளத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. புதிய அணை கட்டி முடித்ததும் தற்போதுள்ள அணையை இடிக்கவும் திட்டமிட்டுள்ளது. புதிய அணை கட் டும் வரை தமிழகத்திற்கான தண்ணீர் பங்கீடு தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.