/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ தேனி திமுக கவுன்சிலரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஸ்ட்ரைக் | DMK councillor | Theni
தேனி திமுக கவுன்சிலரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் ஸ்ட்ரைக் | DMK councillor | Theni
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ். இவர் தங்களை ஒருமையில் பேசுவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் துப்புரவு பணியாளர்கள் குற்றம்சாட்டினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து துப்புரவு பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டடனர். செல்வராஜை கண்டித்து கோஷம் போட்டனர். அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் வரை அடுத்தடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று துப்புரவு பணியாளர்கள் எச்சரித்தனர்.
பிப் 09, 2024