உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / ஆண்டிப்பட்டியில் பொங்கலுக்கு பிறகு மீண்டும் மல்லிகை ஜெட் வேகம் | flower rate today | Madurai Malli

ஆண்டிப்பட்டியில் பொங்கலுக்கு பிறகு மீண்டும் மல்லிகை ஜெட் வேகம் | flower rate today | Madurai Malli

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தைக்கு ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. தைப்பூசத்தையொட்டி பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பனிப்பொழிவு பூக்கள் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் குறைவான பூக்களே சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்து குறைவால் விலை எகிறியது. ஒரு கிலோ மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 3,500 ரூபாயாக உயர்ந்தது. ஒரு கிலோ பிச்சி, முல்லை 1300 ரூபாய்க்கும், சம்பங்கி, அரளி 350 ரூபாய்க்கும், செவ்வந்தி, பன்னீர் ரோஜா 180 ரூபாய்க்கும், செண்டுமல்லி, கோழி கொண்டை 80 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ