கண்ணகி கோயிலுக்கு நன்கொடை வசூல்: கலெக்டர் எச்சரிக்கை
கண்ணகி கோயிலுக்கு நன்கொடை வசூல்: கலெக்டர் எச்சரிக்கை | Theni | Kannagi Temple Chitra Pournami Festival | Collector warning தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோயிலில் மே மாதம் 1 ம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, கண்ணகி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்றனர்.
ஏப் 27, 2026