வனத்துறை கான்ட்ராக்டர் கூட்டு கொள்ளை? | There is a fee to enjoy the waterfall | Kumbhakarai
வனத்துறை - கான்ட்ராக்டர் கூட்டு கொள்ளை? | There is a fee to enjoy the waterfall | Kumbhakarai | Theni தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவி வறண்டது. சில நாட்களுக்கு முன் நீர்ப்பிடிப்பு பகுதியில் லேசான மழை பெய்ததால் அருவியில் குறைந்தளவே நீர் வரத்து உள்ளது. வன விலங்குகள் குடிநீர் தேடி அருவி பகுதிக்கு அடிக்கடி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்தறை தடை விதித்தது. ஆனால் கட்டணம் செலுத்தி அருவியை கண்டு ரசிக்கலாம் என வனத்துறை அறிவித்தது. இதையடுத்து கும்பக்கரை வரும் சுற்றுலா பயணிகளிடம் கீழ வடகரை ஊராட்சி கான்ட்ராக்டர் வாகன கட்டணம் மற்றும் வனத்துறை சார்பாக தனி நபர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி அருவியை கண்டு ரசிக்கலாம் என அனுமதி வழங்கிய வனத்துறை கூடுதல் கவனிப்பு இருந்தால் அருவியில் குளிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டதாக சுற்றுலா பயணிகள் குமுறுகின்றனர். தாகம் தேடி அருவிக்கு வரும் வன விலங்குகளால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்தும் குளிக்க அனுமதித்து ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாமூல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் உயிரோடு விளையாடும் வனத்துறை மற்றும் வடகரை ஊராட்சி கான்ட்ராக்டர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.