உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / ₹50,000 பரிசு | Hockey match | Bodi team wins | Theni

₹50,000 பரிசு | Hockey match | Bodi team wins | Theni

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் போடியில் ஐவர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் 23 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் போடி வெஸ்ட் மவுன்டைன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் வெற்றி பெற்றனர். தேனி அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் , மூன்றாமிடம் பெற்ற அணிக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் நான்காமிடம் பெற்ற அணிக்கு 5000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது . சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த கோல்கீப்பர் மற்றும் வளர்ந்துவரும் விளையாட்டு வீரர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை திமுக தேனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான் செய்தார்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை