உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / நகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு | Traders and officials clash

நகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு | Traders and officials clash

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 2021ம் ஆண்டு வாடகை உயர்வு செய்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து வாடகை நிலுவை தொகையை செலுத்த நகராட்சி உத்தரவிட்டது. நிதியாண்டு நெருங்கும் நிலையில் நகராட்சி கமிஷனர் பர்ஜானா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நிலுவை தொகையை பெற்றதுடன் கட்டாயப்படுத்தி காசோலைகளை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 18 லட்சம் ரூபாய் பாக்கி வைத்த வியாபாரிகள் சங்கத்திற்கு 2 மாத அவகாசம் கொடுத்து, நிலுவை வைத்த மற்ற 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா, கவுன்சிலர்கள் முன்னிலையில், கமிஷனருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சீல் வைத்த கடைகளுக்கு குறிப்பிட்ட சதவீத நிலுவை தொகையை சிறிது சிறிதாக செலுத்தவும், மற்ற கடைகளுக்கு தினசரி வாடகை வசூல் செய்யவும், அதிகாரிகள் மிரட்டல் நடவடிக்கைகளை கைவிடவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். வியாபாரிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அனைவரும் இதனை அதிகாரிகள் பரிசீலனை செய்வதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பிப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை