தவெக நிர்வாகி இல்லாதவர் வேட்பாளரா: நிர்வாகிகள் கொதிப்பு
தவெக நிர்வாகி இல்லாதவர் வேட்பாளரா: நிர்வாகிகள் கொதிப்பு | Theni | Opposition to the TVK candidate in the Cumbum constituency தேனி மாவட்டம் கம்பம் சட்டசபை தொகுதிக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ராவை தவெக வேட்பாளராக விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெகநாத் மிஸ்ரா தவெகவை சேர்ந்தவர் இல்லை, தனி ஒரு கட்சி நடத்தி வந்தவரை எப்படி தவெக சார்பில் அறிவிக்கலாம் என எதிர்ப்பு தெரிவித்து கம்பம் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மண்டல வழக்கறிஞர் இணை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் சந்தரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். வேட்பாளரை மாற்றி அறிவிக்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.