₹100 கோடி திட்டம் என்னாச்சு? | Museum falling into ruin due to lack of maintenance
₹100 கோடி திட்டம் என்னாச்சு? | Museum falling into ruin due to lack of maintenance | Adichanallur Archaeological Site museum | Thirunelveli தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மத்திய அரசின் சைட் மியூசியம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள், தங்க அணிகலன்கள், வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு ஆயுதங்கள் மற்றும் மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் பாதுகாக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பசுமையாக பராமரிக்கப்பட்ட இந்த மியூசியம் தற்போது பணியாளர்கள் குறைக்கப்பட்டு பராமரிப்பின்றி காய்ந்து கிடக்கிறது. முன்பு 3 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 8 தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது அந்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. breath: 2026 - 27 மத்திய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல், 2020 - 21 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு அருங்காட்சியகத் திட்டமும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. breath: சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆதிச்சநல்லூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட கலாச்சார மையத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். சைட் மியூசியத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து சிறப்பாக பராமரிக்க எடுக்க வேண்டும். இதனால் ஆதிச்சநல்லூரின் தொல்லியல் பெருமையை உலகறியச் செய்து, அதிகளவில் டூரிஸ்ட்களை ஈர்க்க முடியும் என்றனர்.