உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள் | Nellai | Babanasa Nath Temple

அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள் | Nellai | Babanasa Nath Temple

நெல்லை மாவட்டம் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச நாதர் கோயிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாள் வீதி உலாநடைபெற்று வருகிறது. 9 ம் நாள் விழாவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது . தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். அரோகரா கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளின் வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ