உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / களைகட்டிய நெல்லை புத்தகத் திருவிழா | Book Festival | Nellai

களைகட்டிய நெல்லை புத்தகத் திருவிழா | Book Festival | Nellai

திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய நூல் விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடக்கிறது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் பல லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் புத்தக விற்பனை, மேடைப்பேச்சு, கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. கண்காட்சியில் திருநெல்வேலி செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் பத்தாம் வகுப்பு மாணவி தீக் ஷனா வரைந்துள்ள பூக்களின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. அதில் புலவர் கபிலர் இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கபிலர். அந்த தொன்மையான 99 பூக்களின் ஓவியங்களை வரைந்துள்ளார் இளம் ஓவிய கலைஞரான தீக் ஷனா. குறிஞ்சி முதல் பாலை வரையிலான ஐந்திணைகளின் பூக்களும் தற்போது இல்லாத பூக்களின் ஓவியங்களும் வரைந்து காட்சிப்படுத்தியுள்ளார். இதன்படி மணிச்சிகை - குன்றிமணி உந்தூழ் - பெரு மூங்கில் கூவிளம் - வில்வ மரம் சுள்ளி - முள் கனகாம்பரம் கூவிரம் - வில்வ மரம் வடவனம் - துளசி என 99 பூக்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை தமிழறிஞர்கள், பெரியவர்கள் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ