உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த 3 பேர் கைது | fake currency Rs 60 lacs seized

கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த 3 பேர் கைது | fake currency Rs 60 lacs seized

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பாணன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோயில் நோக்கி வந்த பொலிரோ ஜீப்பை நிறுத்தி சோதனை விட்டனர். வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனை இட்டனர். அதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு இருப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வாகனத்தில் வந்த சிவகாசியை சேர்ந்த சீமை சாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோயிலை சேர்ந்த கிருஷ்ண சங்கர் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்புடையவர்கள் என அறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி