உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / விஏஓ மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் தான நிலம் அவலநிலை

விஏஓ மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் தான நிலம் அவலநிலை

விஏஓ மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் தான நிலம் அவலநிலை| Crime | Encroachment| Petition திருநெல்வேலி மானூர் பலஸ்தீனாபுரம் கிராமத்தில் சுமார் 130 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு வடக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அரசு நீர்த்தேக்கம் உள்ளது. நீர்த்தேக்கம் உள்ள 61 சென்ட் நிலத்தை குமாரசாமி என்பவர் 1985ம் ஆண்டு தமிழக அரசுக்கு தானமாக வழங்கினார் . தொடர்ந்து அப்பகுதியில் கரையமைத்து ஆழ்துளை கிணறு தோண்டி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பையில் வசிக்கும் மானூரைச் சேர்ந்த சிலர், அந்த இடத்தை 2007ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு மோசடியாக விற்பனை செய்துள்ளனர். பின்னர் தனியார் நிறுவனத்திடம் இருந்து 2021ம் ஆண்டு முருகேசன் என்பவருக்கும் 2025ம் ஆண்டு ஜோசப் நிக்சன் என்பவருக்கும் நிலம் கைமாறி உள்ளது. தற்போது நிலத்தை வாங்கியுள்ள ஜோசப் நிக்சன் வருவாய் அதிகாரிகள் துணையோடு அரசு நீர்த்தேக்க பகுதிக்குள் சர்வே நடத்தியுள்ளார். அதில் 50 சென்ட் நிலத்தை அளந்து சுற்றி வேலி போட்டுள்ளார். நீர்த்தேக்க பகுதிக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து கரையை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அப்பகுதி மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர்த்தேக்கத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. போலியாவணங்கள் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட குற்றத்திற்கு விஏஓ மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கொந்தளித்தனர்.

ஆக 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை