கோர்ட் அவகாசம் கொடுத்தும் சீரமைக்க முன்வரவில்லை என குற்றச்சாட்டு
கோர்ட் அவகாசம் கொடுத்தும் சீரமைக்க முன்வரவில்லை என குற்றச்சாட்டு / Tirunelveli / High Court orders demolition Hospital building திருநெல்வேலி பெருமாள்புரம் சாரல் தக்கர் கல்லூரி ரோட்டில் டாக்டர் வினோத்குமார் பிலிப் என்பவர் தரைதளம் மற்றும் 2 மாடி கட்டிடம் கட்ட அனுமதி பெற்றார். 2016 ல் 5 மாடியாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது, ஆஸ்பிட்டலை சுற்றி தீயணைப்பு வாகனம் வருவதற்கும், அவசரகால பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கும் செட் பேக் இட வசதி விடப்படவில்லை. நடவடிக்கையை எடுக்க வேண்டிய மாநகராட்சியும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளும் வாய் அடைக்கப்பட்டு மௌனம் காத்தனர். பெர்டின் ராயன் என்பவர் 2020ல் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 2023 அக்டோபர் 4 ம்தேதி கட்டிடத்திற்கு சீல் வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. சீல் வைக்கப்பட்ட பின்னர் 6 மாதம் என இரு முறை ஒரு ஆண்டுக்கு அவகாசம் தரப்பட்டது. இருப்பினும் கட்டட உரிமையாளர் ஐகோர்ட் உத்தரவுப்படி சீர் செய்து கட்டடத்தை கட்டிட முயற்சிக்கவில்லை. இன்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மேரி கிளெட் ஆகியோர் அடங்கி அமர்வு அனுமதியற்ற மருத்துவமனை கட்டட பகுதிகளை 8 வாரங்களுக்குள் இடித்திட திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணாவுக்கு உத்தரவிட்டனர்.