உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் | Tirunelveli | Nellie Vande Bharat Express

வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் | Tirunelveli | Nellie Vande Bharat Express

திருநெல்வேலி டு சென்னை செல்லும் நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. பிரேக் ஃபாஸ்ட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கேசரி, இட்டி, சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்பட்டது. நெல்லையை மணிகண்டன், நண்பர் முருகன் ஆகியோர் பார்சலை ஆசை ஆசையாய் பிரித்து பார்த்தனர். அதில் கேசரி, இட்லி, தேங்காய் சட்னி, சாம்பார் இருந்தது. சாம்பாரில் பொன் வண்டுகள் மற்றும் கருப்பு வண்டுகள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரயில்வே ஊழியர்களிடம் புகார் கூறினர். சாம்பாரில் வண்டுகள் இருப்பதை உறுதி செய்த ஊழியர்கள், உணவை திரும்ப பெற்று, இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காது, மன்னித்து விடுங்கள் என கூறினர். சாம்பாரில் வண்டுகள் மிதந்த சம்பவம் பயணிகள் வயற்றில் புளியை கரைத்தது. சுத்தமான, சுகாதாரமான, தரமான உணவு வழங்குவதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ