உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / 10ம் திருநாள் 13 ம் தேதி தாமிர சபையில் நடராஜர் திருநடனம் | Tirunelveli | Nellaipar temple

10ம் திருநாள் 13 ம் தேதி தாமிர சபையில் நடராஜர் திருநடனம் | Tirunelveli | Nellaipar temple

சுவாமி நெல்லையப்பர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை திருவனந்தல் பூஜை, கோபூஜை, கஜ பூஜை நடைபெற்றது. கொடிப்பட்டம் வீதிஉலா வந்து கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி எதிரில் உள்ள தங்க கொடித்தில் வேத மந்திரங்கள் முழங்க திருமுறைகள் பாட நாதஸ்வர இன்னிசையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவிங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அதிகாலை பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவெம்பாவை பாடப்பெற்று நடன தீபாராதனை நடைபெறும். 4ம் நாள் மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி புறப்பாடும், கார்த்திகை திருவனந்தல் பூஜை நிறைவாக இரவு பூம்பல்லக்கு நடைபெறும்.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !