உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் | Vande Bharat train 10 minute delay | Railway Gatekeepers dismissed

கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் | Vande Bharat train 10 minute delay | Railway Gatekeepers dismissed

கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் | Vande Bharat train 10 minute delay | Railway Gatekeepers dismissed | Nanguneri | Thirunelveli நாகர்கோவில் - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயில் நிலைய மேலாளர் வழிநெடுகில் இருக்கும் அனைத்து ரயில்வே கேட் கீப்பர்களையும் போனில் தொடர்பு கொண்டு தயாராக இருக்கும்படி உஷார் படுத்தினர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில்வே கேட்டில் உள்ள கேட் கீப்பர் மட்டும் போன் அழைப்பை வெகு நேரமாக எடுக்கவில்லை. தொடர்ந்து மற்றொரு ஊழியரை தொடர்பு கொண்டு நாங்குநேரி ரயில்வே கேட்டை மூடும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த ஊழியர் நாங்குநேரி ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்தபோது நாங்குநேரி கேட் கீப்பர், மற்றொரு கேட் கீப்பருடன் மது போதையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளித்தார். இதற்கிடையே வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தபோது, நடுவழியில் நிறுத்தப்பட்டது. மாற்று ஊழியர் மூலம் நாங்குனேரி ரயில்வே கேட் அடைக்கப்பட்டதை தொடர்ந்து சிக்னல் கிடைத்து, வந்தே பாரத் ரயில் மீண்டும் பத்து நிமிட காலதாமதத்திற்கு பிறகு வள்ளியூரில் இருந்து புறப்பட்டது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்படத்திற்கு விரைந்து வந்து இரண்டு கேட் கீப்பவர்களையும் அழைத்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மது போதையில் இருப்பது உறுதியானது. பணி நேரத்தில் மது அருந்தி கவனக்குறைவாக ஈடுபட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் சஸ்பெண்ட் செய்து ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மார் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை