/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ திருநெல்வேலியில் வெள்ளம் பாதித்த வயல், குளம், ரோடுகளை ஆய்வு செய்த மத்திய குழு|Tirunelveli flood
திருநெல்வேலியில் வெள்ளம் பாதித்த வயல், குளம், ரோடுகளை ஆய்வு செய்த மத்திய குழு|Tirunelveli flood
திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 17, 18 தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. கடுமையான பாதிப்பை திருநெல்வேலி சந்தித்தது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட 21ம் தேதி மத்திய குழு திருநெல்வேலி வந்தது. பல இடங்களை ஆய்வு செய்தது. இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கேபி சிங் தலைமையில் அதிகாரிகள் திருநெல்வேலி வந்தது. 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். கருப்பந்துறை ஆற்றுப்பாலம், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்ட கட்டுமானம், உடைப்பு ஏற்பட்ட ரோடுகள், குளங்கள், சேதம் அடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டனர்.
ஜன 13, 2024