உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / காரை வைத்து பைக்கில் மோதி இளைஞரை வெட்டிச் சாய்த்த கும்பல் | Tiruvallur | Crime News

காரை வைத்து பைக்கில் மோதி இளைஞரை வெட்டிச் சாய்த்த கும்பல் | Tiruvallur | Crime News

காரை வைத்து பைக்கில் மோதி இளைஞரை வெட்டிச் சாய்த்த கும்பல் | Tiruvallur | Crime News திருவள்ளூர் மாவட்டம் சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன், 33. இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில், தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார். ஜாமீன் நிபந்தனையின்படி, வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக மாரி தனது நண்பர் வெங்கடேஷுடன் பைக்கில் சென்றுள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, இருவரும் தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மாரி சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில் மாரியும், அவரது நண்பர் வெங்கடேஷும் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். அந்த நேரத்தில் காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், மாரியை சுற்றி வளைத்துள்ளது. பின்னர், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மாரியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை செய்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கார் அங்கிருந்த ஒரு வீட்டின் சுவரில் மோதி நின்றுள்ளது. காரில் இருந்த கொலை கும்பலை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். கும்பலில் இருந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், மூன்று பேர் பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர். பின்னர் மூன்று பேரையும் பொதுமக்கள் வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசார், மாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து பொதுமக்களிடம் சிக்கிய மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில், நடுரோட்டில் காரை வைத்து பைக்கில் மோதி இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ