ஆக்டிங் ஊராட்சி தலைவராக வலம் வந்த கணவரால் பதவி இழந்த ஊராட்சி தலைவர் | DMK president Dismiss
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி தலைவர் கீதா. இவரது கணவர் துளசிராமன். திமுகவை சேர்ந்தவர். இவர் ஆக்டிங் ஊராட்சி தலைவராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. ஊராட்சி வளர்ச்சி மேம்பாட்டு பணிகளில் கமிஷன், கட்டிட வரைபட அனுமதியில் கமிஷன், கட்டுமானப் பணியில் கமிஷன் என எதற்கெடுத்தாலும் துளசிராமன் கமிஷன் கேட்டு நச்சரித்து வருவதாக அரசுக்கு புகார் சென்றது. இதுகுறித்து கலெக்டர் பிரபு சங்கர் விசாரணை நடத்தினார். ஊராட்சி தலைவர் கீதா மன்றக் கூட்டங்களை நடத்தாமல் முறையற்ற தீர்மானம் நிறைவேற்றி நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. ஊராட்சி ஆக்டிங் தலைவராக துளசிராமன் வலம் வந்ததை கீதா கண்கொள்ளாமல் இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கீதாவை ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து டிஸ்மிஸஅ செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.