புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் | Tiruvallur | 15 people, including women and children, injured after being bitten by stray dogs திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு, பூவனூர் கிராமங்களில் ரோட்டோரம் நடந்து சென்றவர்கள், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் என 15க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய் கடித்து காயப்படுத்தியது. மேலும் ஒரு பசுமாட்டையும், கடித்தது. காயமடைந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தெரு நாய்கள் சுற்றித் திரிவது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மாவட்ட நிர்வாகம் பொது மக்களை கடிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.