உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணாவை ஆதரித்து நுாதன பிரச்சாரம்

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணாவை ஆதரித்து நுாதன பிரச்சாரம்

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணாவை ஆதரித்து நுாதன பிரச்சாரம் | EPS First signature ₹10,000 | ADMK Election Propaganda | Thiruvallur திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணாவை ஆதரித்து மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இரா. அருண்குமார் தலைமையில் 5வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். முதல்வராக மீண்டும் பழனிசாமி வந்தால் முதல் கையெழுத்து 10,000 ரூபாய், இரண்டாவது கையெழுத்து மகளிர் உதவித் தொகை 2000 ரூபாய், மூன்றாவது கையெழுத்து வீடு தோறும் ஃபிரிஜ், தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம், ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என திட்டங்களை விளக்கி ஓட்டுக் கேட்டனர். 5வது வார்டு இணைச் செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர் அம்பிகா ராஜசேகர், வார்டு பிரதிநிதி ஜெயசந்திரன், பாஜக பிரமுகர்கள் ரகு, மகாராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஏப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !