உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு | GBS syndrome | Chennai

திருவள்ளூரில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு | GBS syndrome | Chennai

GBS எனப்படும் குய்லின் பாரே சின்ரோம் அரிய வகை நரம்பியல் கோளாறு. மூளை மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு வெளியே உள்ள புற நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம், முரணாக நமது உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கும் பாதிக்கப்பட்ட நரம்புகளால் மூளைக்கு சரியான சிக்னலை அனுப்ப முடியாது இதன் விளைவாக உடல் பலவீனம், கை கால் வலி, வயிற்று போக்கு மற்றும் உடல் உறுப்புகளில் உணர்ச்சியின்மை ஏற்படும். நோய் தொற்று தீவிரமடைந்த நிலையில் சுவாச கோளாறு, உணவு குழாய் அடைப்பு, இதய தசை செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் அறிகுறிகள் தீவிரமடைந்த பின்னர் தான் நோய் தொற்று கண்டறியபடும் GBS தொற்றுக்கு பிரத்தியேக சிகிக்சை முறைகள் கிடையாது சுவாசப் பிரச்சனைகளைத் தடுக்கவும் அறிகுறிகளை குறைக்கவும் மட்டுமே சிகிச்சை வழங்கப்படும் GBS நோய் தொற்றிற்கு குறிப்பிட்ட காரணிகள் கிடையாது பொதுவாக வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் GBS தொற்று பரவலாக கண்டறியப்படுவதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா புனேவில் GBS நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் திருவள்ளூர் திருவூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மைத்தீஸ்வரனுக்கு GBS நோய் தொற்று கண்டறியப்பட்டது மைத்தீஸ்வரன் எம்ஜிஆர் நகர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் திடீரென சிறுவனுக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளது அருகில் இருந்த ப்ளே கிரவுண்டில் விளையாடிய போது கால்கள் செயலிழந்து மைத்தீஸ்வரன் கீழே விழுந்தான் வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்ட பின் திருவள்ளூர் அரசு ஹாஸ்பிடலில் சிறுவனை அட்மிட் செய்தனர் மேல் சிகிச்சைக்காக மைத்தீஸ்வரன் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிறுவனின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனுக்கு GBS தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர் கை கால் நரம்புகள் முழுவதும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மைத்தீஸ்வரன் உயிரிழந்தார் மைத்தீஸ்வரனின் இழப்பை தாங்க முடியாத பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர் தமிழகத்தில் கொடிய GBS நோய் தொற்றுக்கான முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் திருவள்ளூர் திருவூர் கிராமத்தில் தீவிர மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது GBS தொற்று நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தினர்

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி