ரோடு கேட்டு பஸ்சை சிறை பிடித்த மக்கள்! உடனே வழிக்கு வந்த அதிகாரிகள் | public protest | Ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சியில் புதுப்பாக்கம் காலனி உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் ரோடை புதுப்பிக்க வேலை நடந்தது. பின்னர் பணியை முடிக்காமல் பாதியிலேயே கிடப்பில் போட்டனர். இதனால் சரளை கற்கள் பெயர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அருமந்தை டு ஞாயிறு செல்லும் ரோட்டில் உட்கார்ந்து மக்கள் மறியல் செய்தனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். உடனடியாக புதிய ரோடு போட வேண்டும் என்று கோஷம் போட்டனர். ஊராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உடனே பணியை துவங்குவதாக உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.