உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்த திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் | Tiruvallur

திருவள்ளூர் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்த திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் | Tiruvallur

திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுமாவிலங்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடைபெற்றது. திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் ஆகியோர் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் நாசர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன் வந்தார். அவரது பெயரை வேளாண் அதிகாரி சொல்லாமல் விட்டார். டென்ஷனான எம்எல்ஏ ராஜேந்திரன் விழா மேடையை விட்டு பாதியில் கிளம்பி சென்றார். செல்லும் போது நான் செத்துப் போயிட்டதா நினைத்துக் கொள்ளுங்கள் என ஆவேசமாக கத்தினார். அவரை கலெக்டர் பிரதாப் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, நான் செத்ததாக நினைத்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்துங்கள். முறையாக எனக்கு அழைப்பு வரவில்லை என கோபமாக பேசிவிட்டு விறுவிறுவென காரில் புறப்பட்டு சென்றார். அமைச்சர் நாசருக்கும், எம்எல்ஏ ராஜேந்திரனுக்கும் ஓடாதோ. அதன் வெளிப்பாடு இப்போ வெட்ட வெளிச்சத்துக்கு வந்துச்சே என பார்வையாளர்கள் கிசுகிசுத்தனர்.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ