உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / கொடியேற்றத்துடன் தொடங்கியது |Veeraraghava Perumal Temple Thai Brahmotsavam

கொடியேற்றத்துடன் தொடங்கியது |Veeraraghava Perumal Temple Thai Brahmotsavam

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஊர்வலமாக வந்து மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடி மரத்தில் கருட கொடி ஏற்றினர். கொடி மரத்திற்கும் உற்சவ பெருமாளுக்கும் தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் சென்றனர். பிப்ரவரி 6ம் தேதி கருட சேவை மற்றும் 10ம் தேதி தேர் பவனி நடக்கிறது.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை