உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் | Ponneri | Yoga Championship Competition

திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் | Ponneri | Yoga Championship Competition

திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் / Ponneri / Yoga Championship Competition திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 2025 ம் ஆண்டிற்கான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. எம்.எஸ்.ஸ்போர்ட்ஸ் மற்றும் யோகா அகாடமி ஃபுனா கோஷிஸ் எக்ஸ்லன்ட் கராத்தே-டு சார்பில் யோகா போட்டி நடைபெற்றது. இதில் ஜூனியர் சீனியர் சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார். அகாடமியில் 5 ஆண்டுகள் கராத்தே பயிற்சி முடித்து பிளாக் பெல்ட் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிளாக் பெல்ட் வழங்கி பாராட்டினார். விழாவில் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் சதாசிவலிங்கம், டாக்டர் ஆபிரகாம் ஜெபகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அகாடமி நிறுவனர் சிஹான்பழனி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ