உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு| state level Badminton tournament| Tiruvarur

சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு| state level Badminton tournament| Tiruvarur

சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு| state level Badminton tournament| Tiruvarur 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் ராணிப்பேட்டையில் நடந்தது. பிப்ரவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை போட்டி நடைபெற்றது 14 வயதிற்கு உட்பட்ட ஐந்தாவது மாநில குழு விளையாட்டு போட்டிகளில் 39 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர். பூப்பந்தாட்ட போட்டியில் வ.சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அணி கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் திருவாரூர் அணி முதல் இடத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணியினர் இன்று சொந்த ஊர் திரும்பினர். மேளதாளம் இசைக்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் நகராட்சி வளாகம் அருகில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஊர்வலமாக அழைத்துச் சென்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் பாலசுப்ரமணியன் விழாவிற்கு தலைமை வகித்தார். சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ், மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் திருவாரூர் பூப்பந்தாட்ட கழக செயலாளர் ரவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ஞானசேகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், ஹரி, பிரதீப் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. 49 ஆண்டுகளுக்கு பிறகு மாநில அளவில் இந்த அரசு பள்ளி முதல் பரிசை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

பிப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ