திருவாரூர் கோர்ட்டில் பரபரப்பு | TVR WEAPON CAR 4 ARREST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கு திருவாரூர் கோர்ட்டில் நடக்கிறது. இவ்வழக்கு தொடர்பாக சேனாபதி மற்றும் தினேஷ் ஆகியோர் கோர்ட்டிற்கு காரில் வந்தனர். கோர்ட் வளாகத்திற்குள் புகுந்த இவர்களது காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார் டிக்கியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிப் 07, 2024