நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மரத்தேர்
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மரத்தேர் /chariot at emadharmaraja temple/devotees pulling chariot in rain திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்கு ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற வாஞ்சிநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் எமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தனுக்கும் தனி சன்னதி உள்ளது. பாவ தோஷங்களுக்கு இந்தக் கோயிலுக்கு வந்தாலே நிவர்த்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று வாஞ்சிநாதர் மற்றும் மகலாம்பிகை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. மழையை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். இந்த கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய மரத்தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது.