பஸ்சை துவங்கி வைத்த திமுக MLA 20 கிமீ பஸ் ஓட்டியதால் பரபரப்பு | DMK MLA Poondi Kalaivanan
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு இன்று புதிய பஸ் விடப்பட்டது. இதற்கான துவக்க விழா கொரடாச்சேரியில் நடந்தது. திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவானன் பச்சை கொடி காட்டி பஸ்சை துவக்கி வைத்தார். அவரே பஸ்சை ஓட்டவும் ஆரம்பித்தார். அவர் ஓட்டும் விதத்தை பார்த்த டிரைவர், பரவாயில்ல! எங்கள விட தெளிவா ஓட்றீங்க என்று கமெண்ட் அடித்தார். இதனால் எம்எல்ஏவுக்கு உத்வேகம் வந்துவிட்டது. அப்படியே திருவாரூர் வரை 20 கிலோ மீட்டருக்கு பஸ்சை ஓட்டி சென்றுவிட்டார். கொரடாச்சேரியில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நலன் கருதி இந்த பஸ் விடப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.