தூங்கும் போது வீடு இடிந்து 4ம் வகுப்பு மாணவி மரணம்! | Rain alert today | Thiruvarur rain
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று காலை முதல் தொடர் மழை பெய்கிறது. பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. இந்நிலையில் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தை ராஜசேகர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ராஜசேகரின் 11 வயதான மகன் மோகன்தாஸ், 9 வயதான மகள் மோனிஷா இடிபாடுகளில் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு மோனிஷா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மோனிஷா பரிதாபமாக இறந்தார். அவர் 4ம் வகுப்பு படித்து வந்தார். அவரது மரணம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது. நன்னிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.