சிங்கப்பூர் டு சென்னை வந்த ஆசாமி கைது |Fraud by showing desire for marriage |one arrested |Tiruvarur
சிங்கப்பூர் டு சென்னை வந்த ஆசாமி கைது / Fraud by showing desire for marriage / one arrested / Tiruvarur திருவாரூர் மாவட்டம் அணக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் வடபாதிமங்கலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் ஆசை வார்த்தை கூறினார். ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். இதற்கிடையே மற்றொரு பெண்ணுடன் சிங்கபூர் சென்றார். இதையறிந்த அப்பெண் திருவாரூர் மகளிர் போலீசில் பாலமுருகன் மீது புகார் கூறினார். பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிங்கப்பூரில் பாலமுருகன் வசிப்பதால் கோர்ட் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். சிங்கப்பூரில் இருந்து சென்னை ஏர்போர்ட் வந்த பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.