டாக்டர் ஆவதே லட்சியம் என சூளுரை
டாக்டர் ஆவதே லட்சியம் என சூளுரை /after losing his father/ govt school student dist first /his ambition is become a doctor திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மஞ்சக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் -உமா தம்பதி மகன் கபிலேஷ். திருவாரூர் மாவட்ட மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். சிறுநீரக செயல் இழப்பு காரணமாக சிங்காரவேலன் கடந்த ஆகஸ்டில் இறந்தார். தாய் உமா கூலி வேலை செய்து கபிலேஷையும் அவரது தங்கையையும் படிக்க வைத்தார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கபிலேஷ் 600 க்கு 580 எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். தலைமையாசிரியர் மற்றும் ஊர் மக்கள் கபிலேஷூ க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மே 09, 2025