திருவாரூர் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு | kabadi competition govt schools students win
திருவாரூர் பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கபடி போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அரசு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் திருவாரூர் அரசு உதவி பெறும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. பேரளம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் நன்னிலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. பேரளம் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.