/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சிறப்பு வழிபாடு Villagers pray for Kamala haris victory
கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சிறப்பு வழிபாடு Villagers pray for Kamala haris victory
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார். நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்த கிராமத்திற்கு அவர்கள் பல உதவிகள் செய்துள்ளனர். வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டால் அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துளசேந்திரபுரம் கிராம மக்கள் அங்குள்ள தர்மசாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஜூலை 23, 2024