உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் விழுந்த லாரி! நள்ளிரவில் அதிர்ச்சி | Lorry Accident | Thiruvarur

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் விழுந்த லாரி! நள்ளிரவில் அதிர்ச்சி | Lorry Accident | Thiruvarur

திருவாரூர் மணல் மேட்டுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது மகன்கள் சுதிகுமார், பிரவீன் குமார். இவர்கள் தங்களது நண்பன் விக்னேசுடன் லாரி ஓட்டி பழக நள்ளிரவில் லாரியை எடுத்து சென்றனர். பிரவீன் குமார் லாரியை ஓட்டினார். தஞ்சை-திருவாரூர் ரோட்டில் எஸ்எஸ்நகர் என்ற இடத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் ஓடும் ஓடம்போக்கி ஆற்றில் லாரி தலைக்குப்புற பாய்ந்து தண்ணீரில் கவிழ்ந்தது. 3 பேரும் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி