திரளான பக்தர்கள் பங்கேற்பு | Mariamman Temple Thimiti Festival
திருவாரூர் மாவட்டம், சிமிழி கிராமத்தில் உள்ள செம்பாயி அம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மே 16, 2024