சாய் பாபாவிற்கு பால் அபிஷேகம் | milk pot and worship
மகா சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இன்று பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் வாசன் நகரில் உள்ள ஸ்ரீ ஸ்கந்தசாய்பாபா கோயில் மற்றும் சொர்ண ஸ்படிக லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறவிருக்கிறது. கீழ வீதியில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீ கந்த சாய் பாபா ஆலயத்திற்கு பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் சாய் பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து மகா ஆரத்தி நடைபெற்றது.
மார் 08, 2024