தூங்கும்போது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து கைவரிசை | mother-in-law Chain snatching
தூங்கும்போது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து கைவரிசை / mother-in-law Chain snatching/3 relations arrest/mannarkudi திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் சிந்தியா (65). இவரது கணவர் ராமச்சந்திரன் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் சாந்தகுமார், விஜய். இருவரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். சிந்தியா வீட்டின் அருகே அவரது மூத்த மகன் சாந்தகுமாரின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சம்பவத்தன்று இரவு சிந்தியா வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் சிந்தியாவை கழுத்தை நெரித்தனர். முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தனர். சிந்தியா மயங்கியதும் அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை கழற்றி எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகினர். மயக்கம் தெளிந்த சிந்தியா பரவாக்கோட்டை போலீசில் புகார் செய்தார் . சிந்தியா சொன்ன அங்க அடையாளங்களை வைத்து செயின் கொள்ளையில் ஈடுபட்டது மருமகள் அருட்செல்வி, வயது 40, அவரது தந்தை அய்யாதுரை, வயது 65 மற்றும் பேரன் அருண்குமார், வயது 19 என தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.