பெண்கள் அதிகளவு பங்கேற்பு | Tiruvarur | Ration shop |Salesperson position
தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் 3280 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் நிரப்பப்படவுள்ளது. விற்பனையாளர் பதவிக்கு ப்ளஸ் 2 தேர்ச்சி மற்றும் கட்டுனர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுகு இளங்கலை, முதுகலை மற்றும் பிஇ படித்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் 33 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 5408 நபர்கள் விண்ணப்பித்தனர். அதற்கான நேர்காணல் திருவாரூரில் தனியார் பள்ளியில் நடந்தது. ஒருவருக்கு 30 நிமிடம் நிர்ணயித்து நேர்முக தேர்வு நடக்கிறது. தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிகம் விண்ணப்பித்தனர். நேர்காணலை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சித்ரா மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாத்திமா சுல்தானா ஆய்வு செய்தனர்.