/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம் | sooshamapureeswarar temple Kumbabhisgekam
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம் | sooshamapureeswarar temple Kumbabhisgekam
திருவாரூர் மாவட்டம் சிறுகுடி கிராமத்தில் உள்ள மங்கலாம்பிகை சமேத சூட்சமபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 8ம் தேதி கும்பாபிேஷக யாக பூஜைகள் துவங்கின. அதைத் தொடர்ந்து இன்று சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை வெகு விமரிசையாக நடத்தினர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
ஜூலை 12, 2024