நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளி்ல் அசத்திய மாணவிகள் | Tiruvarur | Sports competition
திருவாரூர் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தார். காது கேளாதோர். உடல் ஊனமுற்றோர் என பல பிரிவுகளில் 50 மீட்டர், 100 மீட்டர் நீளம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளி்ட்ட பல போட்டிகள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் மேகனசந்திரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். திருவாரூர் எம்எல்ஏ கலைவாணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் புவனாஉள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு அறநெறி அரிமா சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.