சாலையில் நீர்.. மக்கள் அவதி
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம், குடவாசல், காட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் தொடங்கிய மழை நான்கு மணி நேரம் தொடர்ந்து பெய்தது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது.
நவ 26, 2024