தியாகராஜர் கோயில் தேரோட்டம் கொடியேற்று விழா கோலாகலம்
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. சிறப்புமிக்க இக்கோயிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆயில்ய நட்சத்திரதன்று ஆழித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடக்கிறது. அதை ஒட்டி இன்று ஆழித் தேரோட்டக் கொடியேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி கொடியேற்றி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிப் 27, 2024